வாணியம்பாடியில் 5ஆம் வகுப்பு மாணவியை சாக்லேட் கொடுத்து அழைத்த பெண்ணை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்
வாணியம்பாடியில் 5ஆம் வகுப்பு மாணவியை சாக்லேட் கொடுத்து அழைத்த பெண்ணை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
வாணியம்பாடி, அக்.28- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கோணமேடு பகுதியில் செயல்பட்டு வரும் நகராட்சி தொடக்கப்பள்ளியில், வி.வி.எஸ். காலனி பகுதியைச் சேர்ந்த தேவசேனா என்ற 10 வயது சிறுமி 5ஆம் வகுப்பு படித்துவருகிறார்.இந்நிலையில், பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுமியிடம் அங்கிருந்த பெண் ஒருவர் சாக்லேட் கொடுத்து, “நீ என் பேத்திதான், என்னுடன் வா” எனக் கூறி அழைத்துச் செல்ல முயன்றுள்ளார்.இதனைப் பார்த்த பொதுமக்கள் அந்தப் பெண்ணைப் பிடித்து நகர போலீசார் வரவழைத்து அவர்களிடம் ஒப்படைத்தனர்.இதையடுத்து, அந்தப் பெண்ணிடம் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பள்ளி மாணவியைப் பெண் ஒருவர் அழைத்துச் செல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
