புதன், 28 October 2026
⚡ சமீபத்திய
ஆம்பூரில் அரசுப் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி சேதம்! வாகனத்தைச் சரிசெய்து தரக்கோரி ஓட்டுநருடன் வாலிபர் வாக்குவாதம் – 20 நிமிடங்கள் பயணிகள் அவதி! வாணியம்பாடி அருகே வேகமாகச் சென்ற காரின் மேல் அமர்ந்து பயணித்த குரங்கு!பின்னால் வந்த கனரக வாகனங்களைக் கண்டும் அச்சமின்றி பயணம் – வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்! வாணியம்பாடியில் 5ஆம் வகுப்பு மாணவியை சாக்லேட் கொடுத்து அழைத்த பெண்ணை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர் திருப்பத்தூர் ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு! திருப்பத்தூரில் WCM யாக்ஷினிக்கு பிரம்மாண்ட வரவேற்பு! இரண்டு தங்கம், இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் வென்று சாதனை! கிருஷ்ணகிரியில் நேருக்கு நேர் மோதிய பைக்குகள் தீப்பிடித்து எரிந்தன – 2 பேர் உடல் கருகி பலி! வாணியம்பாடி கோட்டத்தில் நாளை 5 மணி நேரம் மின்தடை! எந்தெந்த பகுதிகள் தெரியு கந்திலி அருகே குடியிருப்புப் பகுதியில் கழிவுநீர் தேக்கம்! நோய்த்தொற்று அபாயத்தால் பொதுமக்கள் அவதி. வாணியம்பாடி நகராட்சி அலுவலக நுழைவாயிலில் காங்கிரஸ் பெண் நிர்வாகி தர்ணா! திருப்பத்தூர் ராமகிருஷ்ணா பள்ளியில் அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி – ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்து மாணவர்களின் படைப்புகளை பார்வையிட்டனர்! ஆம்பூரில் அரசுப் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி சேதம்! வாகனத்தைச் சரிசெய்து தரக்கோரி ஓட்டுநருடன் வாலிபர் வாக்குவாதம் – 20 நிமிடங்கள் பயணிகள் அவதி! வாணியம்பாடி அருகே வேகமாகச் சென்ற காரின் மேல் அமர்ந்து பயணித்த குரங்கு!பின்னால் வந்த கனரக வாகனங்களைக் கண்டும் அச்சமின்றி பயணம் – வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்! வாணியம்பாடியில் 5ஆம் வகுப்பு மாணவியை சாக்லேட் கொடுத்து அழைத்த பெண்ணை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர் திருப்பத்தூர் ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு! திருப்பத்தூரில் WCM யாக்ஷினிக்கு பிரம்மாண்ட வரவேற்பு! இரண்டு தங்கம், இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் வென்று சாதனை! கிருஷ்ணகிரியில் நேருக்கு நேர் மோதிய பைக்குகள் தீப்பிடித்து எரிந்தன – 2 பேர் உடல் கருகி பலி! வாணியம்பாடி கோட்டத்தில் நாளை 5 மணி நேரம் மின்தடை! எந்தெந்த பகுதிகள் தெரியு கந்திலி அருகே குடியிருப்புப் பகுதியில் கழிவுநீர் தேக்கம்! நோய்த்தொற்று அபாயத்தால் பொதுமக்கள் அவதி. வாணியம்பாடி நகராட்சி அலுவலக நுழைவாயிலில் காங்கிரஸ் பெண் நிர்வாகி தர்ணா! திருப்பத்தூர் ராமகிருஷ்ணா பள்ளியில் அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி – ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்து மாணவர்களின் படைப்புகளை பார்வையிட்டனர்!
மாவட்ட செய்திகள்

ஆம்பூரில் அரசுப் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி சேதம்! வாகனத்தைச் சரிசெய்து தரக்கோரி ஓட்டுநருடன் வாலிபர் வாக்குவாதம் – 20 நிமிடங்கள் பயணிகள் அவதி!

28 அக்டோபர் 2026 அண்ணாமலை.மோ ஆசிரியர் 20 பார்வைகள் தமிழ் டிஜிட்டல் மீடியா
ஆம்பூரில் அரசுப் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி சேதம்! வாகனத்தைச் சரிசெய்து தரக்கோரி ஓட்டுநருடன் வாலிபர் வாக்குவாதம் – 20 நிமிடங்கள் பயணிகள் அவதி!

ஆம்பூரில் அரசுப் பேருந்து திடீரென பிரேக் போட்டதால் பின்னால் வந்த இருசக்கர வாகனம் பேருந்து மீது மோதி சேதம். இருசக்கர வாகனம் சரி செய்து தரக்கோரி பேருந்து ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் 20 நிமிடங்களுக்கு மேலாக பயணிகள் அவதி!

 

ஆம்பூர் -அக்.28- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (24), கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் இன்று ஆம்பூர் பேருந்து நிலையம் அருகே உள்ள உணவகத்தில் உணவு வாங்கிக்கொண்டு, தனது இருசக்கர வாகனத்தில் பெங்களூரு–சென்னை சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார்.அப்போது முன்னால் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து திடீரென பிரேக் போட்டதால் பின்னால் சென்ற ராஜேஷின் இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக அரசுப் பேருந்தின் பின்புறத்தில் மோதியது. இதில் அவரது இருசக்கர வாகனம் சேதமடைந்தது.இதனால் ஆத்திரமடைந்த ராஜேஷ், அரசுப் பேருந்தின் முன்பாகத் தனது இருசக்கர வாகனத்தை குறுக்கே நிறுத்தினார். தொடர்ந்து, பேருந்து ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர், சேதமடைந்த தனது இருசக்கர வாகனத்தைச் சரிசெய்து தர வேண்டும் எனக் கூறி தகராறில் ஈடுபட்டார்.இதன் காரணமாக அரசுப் பேருந்து நடுவழியில் சுமார் 20 நிமிடங்களுக்கும் மேலாக நின்றது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அவதிக்குள்ளானதுடன், அப்பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் நகர காவல்துறையினர், போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்திய ராஜேஷைச் சமாதானப்படுத்த முயன்றனர்.ஆனால், அவர் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டதால் காவல்துறையினர் ராஜேஷையும் அவரது இருசக்கர வாகனத்தையும் ஆம்பூர் நகர காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.அரசுப் பேருந்தை வழிமறித்து வாலிபர் தகராறில் ஈடுபட்ட சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

பகிர்க

தமிழ்நாடு முழுவதும் நிருபர்கள் தேவை படித்தவர்கள்