வியாழன், 29 October 2026
⚡ சமீபத்திய
ஆம்பூர் அருகே 150 ஆண்டுகால பழமையான அம்மன் கோவிலை அறநிலையத்துறை கையகப்படுத்த எதிர்ப்பு – கோவில் வளாகத்தில் கிராம மக்கள் போராட்டம்! திருப்பத்தூர் மாவட்டத்தில் 20 பயனாளிகளுக்கு 2 கோடியே 21 லட்சம் ரூபாய் வங்கிக் கடன் உதவி – மாவட்ட ஆட்சியர் வழங்கினார்! ஆம்பூரில் அரசுப் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி சேதம்! வாகனத்தைச் சரிசெய்து தரக்கோரி ஓட்டுநருடன் வாலிபர் வாக்குவாதம் – 20 நிமிடங்கள் பயணிகள் அவதி! வாணியம்பாடி அருகே வேகமாகச் சென்ற காரின் மேல் அமர்ந்து பயணித்த குரங்கு!பின்னால் வந்த கனரக வாகனங்களைக் கண்டும் அச்சமின்றி பயணம் – வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்! வாணியம்பாடியில் 5ஆம் வகுப்பு மாணவியை சாக்லேட் கொடுத்து அழைத்த பெண்ணை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர் திருப்பத்தூர் ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு! திருப்பத்தூரில் WCM யாக்ஷினிக்கு பிரம்மாண்ட வரவேற்பு! இரண்டு தங்கம், இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் வென்று சாதனை! கிருஷ்ணகிரியில் நேருக்கு நேர் மோதிய பைக்குகள் தீப்பிடித்து எரிந்தன – 2 பேர் உடல் கருகி பலி! வாணியம்பாடி கோட்டத்தில் நாளை 5 மணி நேரம் மின்தடை! எந்தெந்த பகுதிகள் தெரியு கந்திலி அருகே குடியிருப்புப் பகுதியில் கழிவுநீர் தேக்கம்! நோய்த்தொற்று அபாயத்தால் பொதுமக்கள் அவதி. ஆம்பூர் அருகே 150 ஆண்டுகால பழமையான அம்மன் கோவிலை அறநிலையத்துறை கையகப்படுத்த எதிர்ப்பு – கோவில் வளாகத்தில் கிராம மக்கள் போராட்டம்! திருப்பத்தூர் மாவட்டத்தில் 20 பயனாளிகளுக்கு 2 கோடியே 21 லட்சம் ரூபாய் வங்கிக் கடன் உதவி – மாவட்ட ஆட்சியர் வழங்கினார்! ஆம்பூரில் அரசுப் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி சேதம்! வாகனத்தைச் சரிசெய்து தரக்கோரி ஓட்டுநருடன் வாலிபர் வாக்குவாதம் – 20 நிமிடங்கள் பயணிகள் அவதி! வாணியம்பாடி அருகே வேகமாகச் சென்ற காரின் மேல் அமர்ந்து பயணித்த குரங்கு!பின்னால் வந்த கனரக வாகனங்களைக் கண்டும் அச்சமின்றி பயணம் – வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்! வாணியம்பாடியில் 5ஆம் வகுப்பு மாணவியை சாக்லேட் கொடுத்து அழைத்த பெண்ணை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர் திருப்பத்தூர் ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு! திருப்பத்தூரில் WCM யாக்ஷினிக்கு பிரம்மாண்ட வரவேற்பு! இரண்டு தங்கம், இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் வென்று சாதனை! கிருஷ்ணகிரியில் நேருக்கு நேர் மோதிய பைக்குகள் தீப்பிடித்து எரிந்தன – 2 பேர் உடல் கருகி பலி! வாணியம்பாடி கோட்டத்தில் நாளை 5 மணி நேரம் மின்தடை! எந்தெந்த பகுதிகள் தெரியு கந்திலி அருகே குடியிருப்புப் பகுதியில் கழிவுநீர் தேக்கம்! நோய்த்தொற்று அபாயத்தால் பொதுமக்கள் அவதி.
மாவட்ட செய்திகள்

ஆம்பூர் அருகே 150 ஆண்டுகால பழமையான அம்மன் கோவிலை அறநிலையத்துறை கையகப்படுத்த எதிர்ப்பு – கோவில் வளாகத்தில் கிராம மக்கள் போராட்டம்!

29 அக்டோபர் 2026 அண்ணாமலை.மோ ஆசிரியர் 3 பார்வைகள் தமிழ் டிஜிட்டல் மீடியா
ஆம்பூர் அருகே 150 ஆண்டுகால பழமையான அம்மன் கோவிலை அறநிலையத்துறை கையகப்படுத்த எதிர்ப்பு – கோவில் வளாகத்தில் கிராம மக்கள் போராட்டம்!

ஆம்பூர் அருகே 150 ஆண்டுகால பழமையான அம்மன் கோவிலை அறநிலையத்துறை கையகப்படுத்த எதிர்ப்பு – கோவில் வளாகத்தில் கிராம மக்கள் போராட்டம்!

 

அக்.29- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அய்யனூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஆதி பெத்தபலி அம்மன் கோவிலில், பல தலைமுறைகளாக அப்பகுதி மக்கள் வழிபாடு செய்து, கோவிலைப் பராமரித்து வருகின்றனர். இந்நிலையில், கோவிலை இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக, புதுக்கோவில் அருள்மிகு புத்துமாரியம்மன் திருக்கோவில் செயல் அலுவலர் பாலாஜி என்பவர், அய்யனூர் ஆதி பெத்தபல்லி கெங்கையம்மன் திருக்கோவிலின் பொறுப்புகளை ஏற்க உள்ளதாகவும், அக்டோபர் 29ஆம் தேதிக்குள் கோவில் தொடர்பான அனைத்து பொறுப்புகளையும் ஒப்படைக்குமாறும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.இதுகுறித்த தகவல் கிராம மக்களிடையே பரவியதைத் தொடர்ந்து, அதிர்ச்சியடைந்த பொதுமக்களும் பக்தர்களும் கோவில் வளாகத்தில் திரண்டனர். பல தலைமுறைகளாகத் தாங்களே பராமரித்து வரும் வழிபாட்டுத் தலத்தை அரசு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரக் கூடாது என்றும், அனுப்பப்பட்ட நோட்டீஸைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி, கோவில் வளாகத்திலேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் சம்பவ இடத்திற்கு வராத நிலையில், காவல்துறையினரின் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.150 ஆண்டுகளுக்கும் மேலாக கிராம மக்களின் வழிபாட்டில் இருந்து வரும் அம்மன் கோவிலை அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் நடவடிக்கைக்கு எதிராக நடைபெற்ற இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

பகிர்க

தமிழ்நாடு முழுவதும் நிருபர்கள் தேவை படித்தவர்கள்