சென்னையில் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்து ஆம்பூரில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
சென்னையில் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்து ஆம்பூரில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
ஆம்பூர் -அக்.30- சென்னை கோயம்பேடு மற்றும் வடபழனி பகுதியில் உள்ள பள்ளிவாசலுக்குள் அத்துமீறி நுழைந்து பொருட்களை சேதப்படுத்தியதுடன், அங்கிருந்த இமாமை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும், இந்த சம்பவங்களில் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது கண்டறிந்து அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்க எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் காதர்பேட்டை பள்ளிவாசல் முன்பாக அனைத்து இசுலாமிய கூட்டமைப்பு சார்பில் வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்து வெளியில் வந்த இசுலாமியர்கள் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்பாடத்தில் ஈடுபட்டனர்.மேலும்,பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதாக குற்றம்சாட்டிய போராட்டக்காரர்கள், வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும், இதுபோன்ற சம்பவங்களில் தமிழக அரசு மௌனம் காக்காமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்பாடத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தில், இஸ்லாமிய கூட்டமைப்பினர் மற்றும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகள் கைகளில் கண்டன கோஷங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர். இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.தொடர்ந்து, பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பினர் சார்பில் ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.
