சனி, 31 October 2026
⚡ சமீபத்திய
திருப்பத்தூரில் குழந்தைகள் பாதுகாப்புப் பயிற்சி: கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்களுக்கு ஆட்சியர் அறிவுரை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட மகனைப் பராமரிக்க மருத்துவ விடுப்பு எடுத்த தந்தைக்கு பணிமனையில் நெருக்கடி? சென்னையில் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்து ஆம்பூரில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்! கடையநல்லூர் அருகே மனித–வனவிலங்கு மோதலைத் தடுக்க சிறப்பு ஒத்திகைப் பயிற்சி! சென்னையிலிருந்து வந்த அதிரடிப்படை கமாண்டோக்கள் வனத்துறையினருக்குப் பயிற்சி ஆம்பூரில் அனுமதியின்றி குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசார் நடவடிக்கை. ஆம்பூர் அருகே 150 ஆண்டுகால பழமையான அம்மன் கோவிலை அறநிலையத்துறை கையகப்படுத்த எதிர்ப்பு – கோவில் வளாகத்தில் கிராம மக்கள் போராட்டம்! திருப்பத்தூர் மாவட்டத்தில் 20 பயனாளிகளுக்கு 2 கோடியே 21 லட்சம் ரூபாய் வங்கிக் கடன் உதவி – மாவட்ட ஆட்சியர் வழங்கினார்! ஆம்பூரில் அரசுப் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி சேதம்! வாகனத்தைச் சரிசெய்து தரக்கோரி ஓட்டுநருடன் வாலிபர் வாக்குவாதம் – 20 நிமிடங்கள் பயணிகள் அவதி! வாணியம்பாடி அருகே வேகமாகச் சென்ற காரின் மேல் அமர்ந்து பயணித்த குரங்கு!பின்னால் வந்த கனரக வாகனங்களைக் கண்டும் அச்சமின்றி பயணம் – வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்! வாணியம்பாடியில் 5ஆம் வகுப்பு மாணவியை சாக்லேட் கொடுத்து அழைத்த பெண்ணை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர் திருப்பத்தூரில் குழந்தைகள் பாதுகாப்புப் பயிற்சி: கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்களுக்கு ஆட்சியர் அறிவுரை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட மகனைப் பராமரிக்க மருத்துவ விடுப்பு எடுத்த தந்தைக்கு பணிமனையில் நெருக்கடி? சென்னையில் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்து ஆம்பூரில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்! கடையநல்லூர் அருகே மனித–வனவிலங்கு மோதலைத் தடுக்க சிறப்பு ஒத்திகைப் பயிற்சி! சென்னையிலிருந்து வந்த அதிரடிப்படை கமாண்டோக்கள் வனத்துறையினருக்குப் பயிற்சி ஆம்பூரில் அனுமதியின்றி குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசார் நடவடிக்கை. ஆம்பூர் அருகே 150 ஆண்டுகால பழமையான அம்மன் கோவிலை அறநிலையத்துறை கையகப்படுத்த எதிர்ப்பு – கோவில் வளாகத்தில் கிராம மக்கள் போராட்டம்! திருப்பத்தூர் மாவட்டத்தில் 20 பயனாளிகளுக்கு 2 கோடியே 21 லட்சம் ரூபாய் வங்கிக் கடன் உதவி – மாவட்ட ஆட்சியர் வழங்கினார்! ஆம்பூரில் அரசுப் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி சேதம்! வாகனத்தைச் சரிசெய்து தரக்கோரி ஓட்டுநருடன் வாலிபர் வாக்குவாதம் – 20 நிமிடங்கள் பயணிகள் அவதி! வாணியம்பாடி அருகே வேகமாகச் சென்ற காரின் மேல் அமர்ந்து பயணித்த குரங்கு!பின்னால் வந்த கனரக வாகனங்களைக் கண்டும் அச்சமின்றி பயணம் – வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்! வாணியம்பாடியில் 5ஆம் வகுப்பு மாணவியை சாக்லேட் கொடுத்து அழைத்த பெண்ணை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்
மாவட்ட செய்திகள், தமிழக செய்திகள்

திருப்பத்தூரில் குழந்தைகள் பாதுகாப்புப் பயிற்சி: கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்களுக்கு ஆட்சியர் அறிவுரை

31 அக்டோபர் 2026 அண்ணாமலை.மோ ஆசிரியர் 27 பார்வைகள் தமிழ் டிஜிட்டல் மீடியா
திருப்பத்தூரில் குழந்தைகள் பாதுகாப்புப் பயிற்சி: கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்களுக்கு ஆட்சியர் அறிவுரை

திருப்பத்தூர் மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு குறித்த பயிற்சி!குழந்தை திருமணம், போக்சோ சட்டம் உள்ளிட்டவை குறித்து ஆட்சியர் வே.நல்லசிவன் அறிவுரை!

 

அக்.30- திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்களுக்கான குழந்தைகள் பாதுகாப்பு குறித்த திறன் வளர்ப்புப் பயிற்சி நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் வே.நல்லசிவன் தலைமையில் நடைபெற்ற இந்தப் பயிற்சியில், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை சார்பில், குழந்தைத் திருமணம், இளவயது கர்ப்பம் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான துன்புறுத்தல்களைத் தடுப்பது குறித்து எடுத்துரைக்கப்பட்டது.மேலும், கிராம அளவில் குழந்தைகள் பாதுகாப்புக் குழுக்களைச் சிறப்பாகச் செயல்படுத்துவது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.தொடர்ந்து, குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டம், போக்சோ சட்டம் உள்ளிட்ட சட்டங்கள் குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான சம்பவங்கள் குறித்து தகவல் கிடைத்தவுடன் உடனடியாகப் புகார் அளித்து நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும் விளக்கப்பட்டது.அனைத்து கிராமங்களிலும் குழந்தைகள் பாதுகாப்புக் குழுக் கூட்டங்களை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தவறாமல் நடத்த வேண்டும் என்றும், குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.மேலும், குழந்தைகள் கடத்தல் இல்லாத கிராமங்களை உருவாக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், குழந்தைத் தொழிலாளர் முறை மற்றும் பள்ளி இடைநிற்றலை முற்றிலும் ஒழிக்கவும், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பாலசுப்ரமணியன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் உமா மகேஸ்வரி, மாவட்ட சுகாதார அலுவலர் நா.கஸ்தூரிகா மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க

தமிழ்நாடு முழுவதும் நிருபர்கள் தேவை படித்தவர்கள்